டில்லி

த்திரிகையாளர் சந்திப்பின் போது துணை முதல்வர் பன்னீர் செல்வம் மோடி, கமல், ரஜினி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்

மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டார்.  அதன் பின் அவர் பத்திரிகையாளர்கள சந்தித்தார்.    அப்போது அவர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அவர், “டில்லியில் மர்மமாக இறந்த மாணவர் சரத்பாபு மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.   பிரேத பரிசோதனை முடிந்த பிறகே தெளிவான விவரங்கள் கிடைக்கும்.

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான கல்வெட்டு மதுரையில் உடைக்கப்பட்டது குறித்து எனக்கு ஏதும் தகவல் வரவில்லை.

டில்லியில் இம்முறை பிரதமரை சந்திக்கப் போவது இல்லை.   தவிர சந்திப்புக்கு நேரமும் கேட்கவில்லை.   மோடியுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இதுவரை இல்லை.   இனியும் எதுவும் வராது.

ஜெயலலிதா என்று மரணம் அடைந்தார் என்பது குறித்து திவாகரன் கூறிய தகவலுக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.   விசாரணை ஆணையத்தில் விசாரணை நடைபெறும் போது நான் எதுவும் கருத்து சொல்லக் கூடாது.

அரசியல் கட்சிகளை கமலஹாசன், ரஜினிகாந்த் என யாரும் தொடங்கலாம்.    ஆனால் அவர்கள் மக்களை சந்திக்க வேண்டும்.   மக்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள்.

வைரமுத்து – ஆண்டாள்  என்பது தேவை இல்லாமல் ஏற்பட்ட ஒரு சர்ச்சை.   இந்த விவகாரம் பெரிது படுத்தப் படுவது அனாவசியமானது. ”  என அவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.