சென்னை: அதிமுக தலைமை அலுவலக மோதலுக்கு திமுக அரசு, ஓபிஎஸ்தான் பொறுப்பு -ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்க  இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, ஒபிஎஸ் உள்ளே சென்றதும், அப்போது மோதல் கடுமையானது. ஆனால், இதை தடுக்க காவல்துறையினர் முன்வராமல் இறுதியில் வந்து, இபிஎஸ் ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்த பல ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

காவல்துறையினரின் தாக்குதல் மற்றும் ஓபிஎஸ் தாக்குதலில்  47பேர், 2 போலீஸார் காயமடைந்தனர்.  அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவசரம், அவசரமாக சீல் வைக்கப்பட்டது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்த அதிமுகவினரை,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்  சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம்; காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியவர், அதிமுக தலைமை  அலுவலகத்தில் உள்ள  ஆவணங்களை எல்லாம் சமூக விரோதிகள் அள்ளிச் சென்றுள்ளனர். நீங்கள் இன்று கொடூரமாக அடித்து, தாக்கிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது; ஆனால், அவர் வரவில்லை. காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார்.

தனக்கு கிடைக்காத பதவி, எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர்தான் ஓ.பி.எஸ். அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு செல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா, கேவலமாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர். நீதிமன்றம் மூலமாக விரைவில் நியாயம் பெற்று அதிமுக அலுவலகத்தை  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அத்துமீறி கட்சி தலைமை அலுவலகத்துக்குள் ரவுடிகளுடன் நுழைந்து, கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்ததாக்குதல் என்பது திமுக அரசும், ஓபிஎஸ்ஸும் இணைந்து போட்ட திட்டம். நீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்று, அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!