டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வும் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

காலை 11,30 மணி அளவில் மாநிலங்களவை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் முன்னிலையில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் போட்டி குறித்து யஷ்வந்த் சின்ஹா, “நான் யார்? திரௌபதி முர்மு யார் என்பதற்கான போட்டி அல்ல, சித்தாந்தத்துக்கான போட்டி” எனக் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்! பிரதமர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்பு…