டில்லி:

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற இரண்டு ஆண்டில், திடீரென பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அந்த சமயங்களில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய பயணம் மாற்று வதற்கு 40 சதவிகிதம் கமிஷன் பெற்றோம் என்று  பாஜக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம்  நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.   அதனால் உயர்மதிப்பு நோட்டுக்களான ரூ 500 மற்றும் ரூ 1000 செல்லாததாகின.

பணமதிப்பிழப்பின்போது வங்கி முன்பு காத்து கிடந்து மக்கள் பட்ட அவதி

கறுப்பு பணத்தை வெளிக்கொணரவே பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதாக மோடி கூறினார். ஆனால், அவ்வாறு எந்த கறுப்பு பணமும் வெளிவராத நிலையில், செல்வந்தர்களும், தொழிலதி பர்களும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய பணமாக மாற்றிக்கொண்டனர்.

ஆனால், சாதாரண ஏழை மக்கள், தங்களிடம் இருந்த ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வும், புதிய நோட்டுக்கள் பெறவும் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் இயந்திரங்களின் வாசல்களின் தவியாய் தவம் கிடந்தும் பலர் தங்களது உயிரையும் இழந்தனர்.

மோடியின் அறிவித்து பணமதிப்பிழப்பு, ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலேயே அறிவித்ததாகவும் கூறப்பட்டது. இதன்காரணமாக அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். பலர் மரணத்தையும் தழுவினர். மோடியின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இருந்தாலும் அவ்வப்போது பழைய நோட்டுக்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது நடுத்தர மக்களே.

பணமதிப்பிழப்பின்போது திருட்டுத்தனமாக பணத்தை மாற்றி கொடுத்த பாஜக நிர்வாகி

இந்த நிலையில்,  2016ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதிக்கு பிறகு செல்லாத  பழைய நோட்டுக்கள் எப்படி மாற்றப்பட்டன என்பது குறித்து பாஜக ஆதரவாளர் ஒருவர் பேரம் பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், குறிப்பிட்ட நபர், பழைய பணத்துக்கு பதிலாக புதிய பணம் பெற்று தர தனக்கு 40 சதவிகிதம் கமிஷன் வேண்டும் என்றும் கறாராக கூறி இருப்பதாகவும், தனக்கு கிடைக்கும் கமிஷனில் ஒரு பகுதி  மேலிடத்திற்கு கொடுக்கப்படுவதாகவும் கூறி உள்ளார்.

இந்த வீடியோவில், கமிஷனுக்கா பணம் மாற்றும் பாஜக நிர்வாகி, சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு குஜராத் பாஜக அலுவலகத்துக்கு செல்லும், நிலையில், அங்கிருந்து வெளியே வரும்போது, கையில் பெரிய சூட்கேசுடன் காணப்படுகிறார்… அப்போது ஒருமுறை குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் வரை மாற்றி தருவதாக கூறுபவர், எத்தனை கோடி ரூபாயும் மாற்ற முடியும், தங்களிடம் அதற்கான வழி உள்ளது என்றும் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள.

தங்களிடம் உள்ள பழைய பணம், குவைத்தில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்று கூறியவர், அங்கு தங்களுக்கு பல புராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன….பழைய பணம் குறித்து கவலைப்பபட வேண்டாம் என்றும்…  மோடியிருக்க பயம் எதற்கு என்று கூறுவதாக அந்த வீடியோவில் பதிவாகி  உள்ளது… இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.‘

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அப்பாவி மக்களை கொடுமை படுத்திய மோடியின் உண்மையான முகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வீடியோவை  இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்பட மூத்த தலைவர்கள் வெளியிட்டனர்.

பாஜக நிர்வாகி பேசும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர்கள்…