டில்லி

லைமை நீதிபதி மீது மற்ற நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் அளிக்காதது குறித்து இன்று எதிர்க்கட்சிகள் சந்தித்துப் பேச உள்ளன

கடந்த வருடம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.  அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுக்களையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.    பிறகு சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன.   அதன் பிறகு இது குறித்து யாரும் பேசவும் இல்லை.

தலைமை நீதிபதி மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்டுள்ளது என்பதை அறிய காங்கிரஸ் கட்சி மனு ஒன்றை தயாரித்தது.   அதில்  50 மாநிலங்கள் அவை உறுப்பினர் கையெழுத்து இட்டிருந்தனர்.   இதை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த பாராளுமன்றத் தொடரில் அளிக்க அக்கட்சி திட்டமிட்டிருந்தது.   ஆனால் திருணாமுல் காங்கிரஸ் போன்ற சில எதிர்க்கட்சிகள் ஒத்து வராததால் இதை சமர்பிக்க இயலவில்லை.

எனவே தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்துகின்றனர்.      இந்த சந்திப்பில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி,  பகுஜன் சமாஜ் கட்சி,  ராஷ்டிரிய ஜனதா தளம்,  கம்யூனிஸ்ட், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கலந்துக் கொள்கின்றன.    இந்த சந்திப்பில்  காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் என தெரிய வந்துள்ளது.