டில்லி
விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த மசோதாக்களை ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மாநிலங்களவை துணைத் தலைவர் அதைக் கவனத்தில் கொள்ளாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றினார்.
இதையொட்டி நேற்று முதல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை நாடாளுமன்றத்தின் உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து ஒரு உறுப்பினர்,
“நாங்கள் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய இரவை இங்கேயே கழிக்க உள்ளோம்.
நாங்கள் விவசாய மசோதாக்களையும் மாநிலங்களவையில் அவை நிறைவேற்றப்பட்ட முறையையும் கடுமையாக எதிர்க்கிறோம்”
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=IJssW7QlERk]