டெல்லி:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று டெல்லி ஐதராபாத் நகரில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணாக டெல்லியில் வாகனங்கள் எரிக்கப்பட்டு வன்முறைக்களமானது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் மத்தியஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.

இந்த நிலையில்,  நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து குடியரசுத் தலைவருக்கு விளக்க மளிக்கும் வகையில் அவசர கூட்டத்திற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள் நேரம் கோரியுள்ளதாக தலைநகர் வட்டார செய்திகள் கூறுகின்றன.