சென்னை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் அமைதிக்கான வழி என்று கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியங்கா காந்தி உள்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என உ.பி. விவகாரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ஒன்று ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் விவசாயி கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3ந்தேதி) உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற நிகழ்ச்சிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த நிகழ்ச்சியில், பங்கேற்க சென்ற ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். இதனால் விவசாயிகள் அதன்பிறகு வந்த கார்கள் மீது தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி வன்முறை களமானது. இந்த வன்முறை வன்முறை சம்பவங்களில் 2 சொகுசுகார் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி,அகிலேஷ் யாதவ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து டிவிட் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
இவ்வாறு கூறியுள்ளார்.