டெல்லி’

திர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது உறுப்பினர்களின் பதவியேற்புக்கு பிறகு 27 ஆம் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

மறுநாள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது. ஆயினும் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன.

இவற்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எனவே மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை. பா.ஜனதா எம்.பி. சுதான்ஷு திரிவேதி தொடங்கி வைத்து பேசினார். பிறகு பா.ஜனதா எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர்.  இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்கியது.

அதே வேளையீல் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டமக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.