டில்லி

பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசிய ஜெயராம் ரமேஷுக்கு காங்கிரஸ் கட்சியில்  எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது.

மூத்த காங்கிரஸ் தலைவர் மாநிலங்களை உறுப்பினருமான ஜெயராம் ரமேஷ் சமீபத்தில் பிரதமர் மோடியை எப்போதும் எதிர்ப்பது சரியான கொள்கை இல்லை எனவும் அவர் மக்களின் ஆதரவு பெற்று மீண்டும் பிரதமராகி உள்ளதால் மக்கள் எண்ணத்துக்கு எதிராக நடப்பது சரி இல்லை எனவும் கருத்து தெரிவித்தார்.. இதற்குக் காங்கிரசைச் சேர்ந்த  சசிதரூர் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வரவேற்பு தெரிவித்தன. இவர்கள் மூவர் மீதும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

கேரளா காங்கிரஸ் தலைவர் பிரதீபன், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் மோடிக்கு ஆதரவாக மூத்த உறுப்பினர்கள் நடந்துக் கொள்வதாக புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைமை ஜெயராம் ரமேஷ், சசி தரூர் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோரின் மோடி ஆதரவுக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு  கட்சிக்கு எதிரானவர்களைப் புகழ்வது கட்சியின் ஜன்நாயகத்துக்கு எதிரானது என அக்கட்சியின் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

வீரப்ப மொய்லி

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி, “மோடியைக் குறைத்து மதிப்பிட்டு  எப்போதும் எதிர்ப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த முறை காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைகள் முடக்கத்துக்கு ஜெயராம் ரமேஷ் காரணம் ஆவார். அவர் அரசின் தோல்விகளுக்குப் பல முறை காரணமாக இருந்துள்ளார். மோடியைப் புகழ்ந்து ஜெயராம் ரமேஷ் தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது. இது அவருடைய மட்டமான மனநிலையைக் காட்டுகிறது.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்ற தலைவர்களும் காங்கிரஸ்  கட்சிக்கோ அல்லது கட்சித் தலைமைக்கோ உண்மையான பணியைச் செய்யவில்லை எனவே நான் கருதுகிறேன். ஜெயராம் ரமேஷின் கருத்தை வரவேற்றதாகக் கூறும் சசி தரூர் ஒரு பண்பட்ட அரசியல் வாதி என எப்போதுமே கருத முடியாதவர் ஆவார். அவர் அடிக்கடி பத்திரிகையில் தன் பெயர் இடம் பெற இவ்வாறு அறிக்கைகள் அளிப்பது வழக்கமாகும்.: எனத் தெரிவித்துள்ளார்.