சென்னை

மீபத்தில் நடந்த ஆய்வின்படி  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு சுமார் 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதரவு தெரிவிப்போர் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் எண்ணிக்கை  குறித்து ஒரு ஆய்வு நடந்துள்ளது.  இந்த ஆய்வு சென்ற மாதம் பொதுச் சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளது.

இந்த ஆய்வு சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடந்துள்ளது.  ஆய்வுக் குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதார சேவை துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு செய்துள்ளனர்.  சென்னையில் இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாநகராட்சியின் ஆதரவுடன் நடத்தி உள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 95 தொகுப்புக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இந்த தொகுப்புக்களில் 30 வீடுகள் சேர்க்கப்பட்டன.  அந்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒரு உறுப்பினர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.  கொரோனா தடுப்பூசி குறித்த அவர்கள் கருத்தைக் கேட்பதற்கு முன்பு அவர்கள் ஊசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் கேட்கப்பட்டது.

அந்த உறுப்பினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் அதை அவர் போட்டுக் கொண்டதற்கான காரணங்கள் என்னென்ன என்பதைக் கேட்டுப் பதிவு செய்யப்பட்டது.   அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் போட்டுக் கொள்ளாத காரணம் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்களா என்பதும் கேட்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோரில் 80.3% ஆண்களும் 81.6% பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர்.   ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள 19.7% ஆண்கள் மற்றும் 18.4% பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 82.5% நகரங்களில் வசிப்போரும் 79.7 கிராமங்களில் வசிப்போரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளனர்.  அதே வேளையில் கிராமங்களில் வசிப்போரில் 20.3% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

இந்த ஆய்வில் மூலம் 18-44 வயதானவர்களில் 83.1% பேரும் 45-60 வயதானவர்களில் 81.8% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 72.4% பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர்.   ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 27.6% பேர் த்டுப்பூசிக்க் எதிராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.