சென்னை: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க அரிய வாய்ப்பை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, மார்ச்1ந்தேதி சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசு வேலை பெற, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவுகளை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டும் பதிவை புதுப்பிக்க வேண்டும். அதன்படி,  கடந்த 2014, 2015, 2016ஆம் வருடங்களில் பதிவு செய்தவர்கள்  தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால்  புதுப்பிக்க தவறியுள்ளனர். அவர்களின் நலன் கருதி, பதிவை புதுப்பிக்க தமிழகஅரசு அவகாசம் வழங்கி உள்ளது.

ஏற்கனவே  2017, 2018 மற்றும் 2019ஆம் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே புதுப்பிக்க சலுகை வழங்கிய நிலையில், தற்போது 2014, 2015, 2016ஆம் வருடங்களில் பதிவு செய்தவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு பதிவை ஆன்லைன் வாயிலாக இணையதளத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம்.

இதற்காக https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணைதளத்திற்கு சென்றுவிட்டு புதுப்பிக்க தவறிய பதிவை புதுப்பித்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் தங்களின் கல்வித்தகுதி குறித்த தகவல்களையும் இதில் புதுப்பித்து கொள்வதற்கான வசதிகளும் இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  அதன்படி அன்று முதல் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை பதிவை புதுப்பித்து கொள்ளலாம். மேலும, பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம்.