சென்னை:
சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மாணவர்கள் உள்பட 60 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரனோ உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து சென்னை ஐஐடியில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் இன்று மேலும் 1,121 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]