னாஜி

த்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவாவில் நடந்த கல்வீச்சில் அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

இன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எனவே கோவா மாநிலம் மார்கோ நகர் அருகே உள்ள சாவ் ஜோஸ் டி ஏரியல் என்ற கிராமத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டது. சிவாஜி  சிலையைக் கோவா மாநில சமூக நலத்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் சிலையைத் திறந்து வைத்தார். அவர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் ஏறியபோது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

அப்போது சில கற்கள் அமைச்சர் சுபாஷ் பால் தேசாயின் மீதும் விழுந்தன. இதில் அவர் காயமடைந்தார்.  அப்பகுதியில் உள்ளவர்களில் ஒரு சிலர் சிவாஜி சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அந்த எதிர்ப்பையும் மீறி சிலை வைக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் தேசாய் இது குறித்து,

“சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டுப் புறப்பட்டபோது கற்கள் வீசப்பட்டு சில கற்கள் என் மீது விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. ஆயினும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் நேற்று ஆய்வு செய்தபோது சிவாஜி சிலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களை தூண்டிவிட்டிருக்கிறார்கள்” 

என்று தெரிவித்தார்.

அந்த மாவட்ட காவல் சூப்பிரண்டு,

சத்ரபதி சிவாஜி சிலையானது, பொது இடத்தில் நிறுவப்படவில்லை. அதே ஊரில் உள்ள ஒரு இஸ்லாமியர் தானமாக வழங்கிய இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் நேற்று முதலே எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். இங்குப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது” 

எனத் தெரிவித்துள்ளார்.