டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும்,  விங் கமாண்டர் வியோமிகா சிங்,  கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான்  அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு  பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ”ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குடல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக கருதப்பட்ட,   மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது. சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர் ஆகிய 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதுதொடர்பாக இன்று காலை தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “ஏப்ரல் 22, 2025 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கி, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 25 இந்தியர்களையும் 1 நேபாளக் குடிமகனையும் கொன்றனர்… அவர்கள் சுற்றுலாப் பயணிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தலையில் சுட்டனர்…” அந்தக் குடும்பத்தினர் மிரட்டப்பட்டு, அந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் செய்தியைத் தெரிவிக்கச் சொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் செழித்து வருவதால், தாக்குதலின் முக்கிய நோக்கம் அதை சேதப்படுத்துவதாகும்…”

இந்த பஹல்காம் பயங்கரவாத  தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன.” ஏப்ரல் 25 அன்று, UNSCயின் ஊடக வெளியீட்டில் இருந்து TRF பற்றிய குறிப்பை நீக்க பாகிஸ்தானின் அழுத்தத்தை புறக்கணிக்கக்கூடாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது…”

“பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் எங்கள் உளவுத்துறை அமைப்புகள், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன, மேலும் அவற்றை நிறுத்தி சமாளிப்பது அவசியம் என்று கருதப்பட்டது.” இதையடுத்து பயங்கரவாதிகளை ஒழிக்கவும், தடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டது, எனவே இன்று அதிகாலையில், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா தனது எதிர்வினையாற்றும் உரிமையைப் பயன்படுத்தியது… எங்கள் நடவடிக்கைகள் அளவிடப்பட்டவை மற்றும் தீவிரமடையாதவை, விகிதாசாரமானவை மற்றும் பொறுப்பானவை. அவர்கள் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றுவதில் கவனம் செலுத்தினர்.

பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகக் கருதப்பட்டது. இரண்டு வாரங்கள் கடந்தும், பாகிஸ்தானிடமிருந்து அதன் பகுதியில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

தீவிரவாதிகளுக்கு பயிற்சி இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது  என்றும் கூறினார்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷி  “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று தெரிவித்தார். மேலும், “எந்த இராணுவ நிலையையும்  நாங்கள் குறிவைக்கவில்லை, மேலும் இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை” என்று சோபியா குரேஷி கூறினார்.

இதையடுத்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங். “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன… பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஐ.நாமீதும் குற்றம் சாட்டினார். அப்போது,  பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்பு, 2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் ஒளிபரப்பியது.