சென்னை:  ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிநாடுகளுக்கு விளக்கும் வகையில்,  திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது.

மினி சுவிட்சர்லாந்து எனப்படும் காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான்  பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டி தள்ளினர். குறிப்பாக இந்துக்கள் யார் என விசாரித்து அவர்களை சுட்டுக்கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையின மத்தியஅரசு, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாத முகாம்களை  இந்திய ராணுவம்  தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என கூறப்பட்டது.

இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில்,  காங்கிரஸ் எம்.பி. சசிதரர்,  திமுக எம்.பி.  கனிமொழி உங்பட 7 பேர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. ,இந்த குழுவினர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய அரசின் விளக்கத்தை தெரிவிக்கின்றனர்.

இந்த குழுக்களில் ஒன்றான  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழு  இன்று வெளிநாடு செல்ல உள்ளது. இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் குழு ரஷ்யா புறப்படுகிறது. நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகளை குழு சந்திக்கிறது. ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா செல்கிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் குழு விளக்கம் அளிக்கிறது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவினர்,   பயங்கரவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி பலரும் பல்வேறு விதமான கருத்து தெரிவிக்கின்றனர். அது போன்ற குழப்பங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆகையால் உண்மையை வெளிக்கொண்டுவர அரசியல் வேறுபாடுகளை மறந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க இருக்கிறோம் என கூறினர்.