சென்னை: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் பெரும் வரவற்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல கட்சி தலைவர்களும் ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டுதெரிவித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’-க்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் தொடக்கம் தான்! என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது. பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், OPERATION SINDOOR jai Hind என குறிப்பிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், Operation சிந்தூர், வெற்றிவேல்! வீரவேல்! என குறிப்பிட்டுள்ளது.
அதுபோல பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது. பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.