டில்லி:

காவிரியில் தமிழகத்துக்கு  5 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக்குழு  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று மாலை7  அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் 9.50 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது. ஆனால் கர்நாடக  அரசு காவிரி ஒழுங்காற்று குழு ஆணையின்படி ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கர்நாடகா தண்ணீர் திறக்காமல் அடம் பிடித்தது. அது குறித்த விஷயத்தில் காவிரி மேலாண்மை ஆணையமோ, ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த மாதம்  (ஆகஸ்டு) திறக்க வேண்டிய தண்ணீர் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு  உத்தரவிடப்பட்டது.

அடுத்த ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆக. 8ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.