சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தும்படி, மாநில தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நலாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று முதல் 17ந்தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.