70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் செய்ததாக மோடி கூறுவது ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களின் வளர்ச்சியை பற்றியது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உ.பி. மாநிலம் அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல். சர்மாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அவர் இவ்வாறு பேசினார்.

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசுவதற்கு பதிலாக கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் பாஜக வாக்கு சேகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

நாங்கள் கடவுளையும் மதத்தையும் மதிக்கிறோம் ஆனால் கடவுளின் பெயரால் அரசியல் செய்வது தவறு என்று கூறினார்.

10 ஆண்டுகளில் தனது அரசு செய்ததை இந்த 70 ஆண்டுகளில் வேறு எந்த அரசும் செய்யவில்லை என்று மோடி பேசி வருகிறார்.

10 ஆண்டுகளில் யாருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்தது ? என்று கேள்வியெழுப்பிய அவர்,

தொழிலதிபர்களின் ரூபாய் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் பெரு முதலாளிகளின் செல்வம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.