மகாராஷ்டிரா : இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – மற்றவர்கள் பாஸ்

Must read

மும்பை

ரடங்கு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிரா உயர்கவ்லி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கு காரணமாக நாட்டில் எந்த ஒரு கல்வி நிலையமும் இயங்கவில்லை.   இந்த தொற்றால் மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி அம்மாநில பள்ளிக் கலவித் துரை ஏற்கனவே 9 மற்றும் 11 ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதல் அதிகரிப்பதால் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது சந்தேகமாக இருந்தது.  நேற்று மகாராஷ்டிர மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த், “மகாராஷ்டிராவிலுள்ள அனைத்துப்  பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதத் தேவை இல்லை.

மீதமுள்ள இறுதி ஆண்டில் பயிலும் 8 லட்சம் மாணவர்களுக்கான தேர்வு மட்டும் ஜூலை 1 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.  ஆனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் ஜூன் 20 ஆம் தேதிக்கு பிந்தைய நிலையின் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.   முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றனர்.

ஒரு சில மாணவர்கள் முந்தைய வருடப் பாடங்களில் அரியர்கள் வைத்துள்ளனர்.  ஆயினும் அவர்களும் அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அவர்கள் தங்கள் அரியர் தேர்வுகளை  அடுத்த 120 நாட்களுக்குள் அவசியம் முடிக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் அடுத்த வருடத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

More articles

Latest article