புதுடெல்லி: இந்த 17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், சட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 4% என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம் இயற்றக்கூடிய நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவைக்கு, சட்டம் படித்தவர்கள் மிக மிக குறைவாக இந்தமுறை தேர்வு செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பொதுவாக, நமது நாடாளுமன்றமாகட்டும், பெரும்பாலான சட்டமன்றங்களாகட்டும், அதிலே குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஒவ்வொரு முறையும் கணிசமாக தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கை. இந்த எண்ணிக்கை வடமாநிலங்களில் மிக அதிகம்.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் மக்களவையில் தேர்வுசெய்யப்பட்ட சட்டப் பின்னணிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 36%. கடந்த 16வது மக்களவையில் தேர்வுசெய்யப்பட்ட சட்டப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை 7%.
ஆனால், இந்தமுறை அதைவிட மிகவும் குறைந்த 4% என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.