வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.
வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக பெற முடியும்.

உரிமையாளரும் வாடகைதாரரும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான e-verification மூலம் 2 மாதங்களுக்குள் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது இணைய வழியாக கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யத் தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வணிகக் கட்டிடங்களுக்கு அதிகபட்சம் 6 மாத வாடகை வரை முன்பணம் பெற அனுமதி.
வாடகை உயர்வு ஒரு ஆண்டுக்குப் பிறகே செய்யலாம்; அதற்கான அறிவிப்பு 2 மாதங்களுக்கு முன் வழங்கப்பட வேண்டும்.
வீடு தொடர்பான பழுது நீக்கம் 30 நாட்களுக்குள் உரிமையாளரால் செய்யப்பட வேண்டும்; தாமதமானால், வாடகைதாரர் பழுது பார்த்து அதற்கான செலவை வாடகையில் இருந்து கழிக்கலாம்.
உரிமையாளர் வீட்டிற்குள் செல்ல வேண்டுமெனில் வாடகைதாரருக்கு 24 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வமாக தகவல் கொடுக்க வேண்டும்.
சரியான காரணமின்றி வாடகைதாரரை காலிசெய்யச் சொல்ல முடியாது; வாடகை செலுத்தாமல் இருத்தல், வீட்டிற்கு சேதம் செய்தல் போன்ற சூழல்கள் மட்டுமே பொருத்தமானவை.
வாடகைத் தகராறு மற்றும் வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்குகள் 2 மாதங்களில் தீர்க்கப்படும்.