சென்னை:  இந்தியாவுக்கே  முன்மாதிரியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டமசோதா கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த ஆட்டத்தின் மோகத்தால் பலர் அதில் ஈடுபட்டு, ஏராளமான பணங்களை இழந்து, கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முடிவை எடுக்கின்றனர். மாணவர்கள் முதல்வர் காவல்துறையினர் வரை பலர் இதுபோன்று தற்கொலைகளை நாடி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துள்ளதாக பாமக தலைவரும் குற்றம் சாட்டி உள்ளார். இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிட்ம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதலளித்தவர், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக  இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கே  முன்மாதிரியாக அமையும், வகையில் அதை தடை செய்யும் வகையில் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் சட்டத்தை,  எந்த நீதிமன்றத்தாலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது, முதலமைச்சரின் விருப்பம்.  எனவேதான் அதற்கேற்ற வகையில், தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில், அதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்றவர், இந்த சட்டமசோதா அ வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

நீட் மசோதா தொர்பான கேள்விக்கு பதில் கூறியவர், ஏற்கனவே  “கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா பொறுத்தவரையில் கவர்னரிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறை மூலம் பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம என்றார்.

பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான மசோதா குறித்த கேள்விக்கு, பல்கலைக்கழக துணைவேந்தராக  யாரை நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்டமுன்வடிவுகளும் கவர்னரின் பரிசீலனையில் இருக்கிறது என்று கூறினார்.