
டெல்லி:
இந்தாண்டு மேமாதம் முதல் தொழிலாளர் வைப்புநிதியை ஆன்லைனில் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக இதுவரை ஒருகோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றை விரைவாக பைசல் செய்ய இந்தாண்டு மேமாதம் முதல் ஆன்லைனில் மனுக்கள் பெறவும், பணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையர் வி.பி.ஜாய் கூறினார்.
இதற்காக அனைத்து வைப்புநிதி அலுவலகங்களையும் இணைக்கும் வகையில் சர்வர் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel