டில்லி

செய்தி ஊடகங்களும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்களும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இணைய தள செய்தி ஊடகங்கள் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்களில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகின்றது.   இந்த ஊடகங்களுக்குத் தணிக்கை இல்லாதது குறித்தும் பலரும் குறை கூறி வருகின்றனர்.

இது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் இணையச் செய்தி ஊடகங்கள் மற்றும் பட ஊடகங்களை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அமைச்சரவை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், “இணையத்தில் திரைப்படம் மற்றும் ஒலி ஒளி ஊடகங்கள் மற்றும் செய்திகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இணையம் மூலம் அறிவிக்கும் ஊடகங்கள் ஆகியவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.