முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு விண்ணப்பம் வெளியீடு… மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

Must read

மதுரை:

முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை, தகுதித்தேர்வு, விண்ணப்பம் போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றன.

வரும் கல்வி ஆண்டிற்கான முதுகலைப் படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதுவோருக் கான விண்ணப்பபடிவங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்  இணையதளம் மூலமாக வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது  முதுகலை பட்டப் படிப்புகளான எம்.பில், பிஎச்டி (M.Phil  P.hd)  பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு எழுதலாம் எனவும் அதற்கான விண்ணப்பத்தை www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக மாணவர்கள் பெறலாம் எனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் வசந்த் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார்.

More articles

Latest article