வீடுகளுக்கு மது சப்ளை..  தயாராகும் நிறுவனங்கள்..

இந்தியாவில் இரண்டு பெரிய மாற்றங்களை கொரோனா நிகழ்த்தியுள்ளது.

சினிமா தியேட்டர்களின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.அந்த இடத்தை ஓ.டி.டி.எனப்படும் ’’ஆன்லைன்’ கள் பிடித்துள்ளன.

அடுத்து-

மதுக்கடைகள்.

இந்தியாவில் மது இருக்கும்.

ஆனால் கடைகள் இருக்காது.

’’கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், சமூக இடைவெளி முக்கியம். மதுக்கடைகளில் சமூக இடைவெளி சாத்தியம் இல்லை’ எனவே ’ஆன்லைன்’ மூலம் மது விற்பனை செய்வதை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வந்து கொண்டிருக்கும் வருமானம் தொடர வேண்டுமானால் ‘’ ஆன்லைன்’’ மூலம் அதாவது வீடுகளுக்கு நேரடியாக மது விற்பனை செய்வதை வேறு வழி இல்லை.

விற்பனை செய்யப்போவது யார்?

தற்போது வீடுகளுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சொமாடோ நிறுவனம் ’ஆன்லைன்’’ மது விற்பனையில் ஈடுபடத் தயாராகிவிட்டது.

இது தவிர ‘ஸ்விக்கி’’ ‘’ ஹிப்பர்’’ உள்ளிட்ட நிறுவனங்களும் மதுபான டோர் டெலிவரியில் இறங்கும் என்று தெரிகிறது.

இந்த நிறுவனங்களும் இப்போது, இந்தியாவில் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் தான்.

இந்தியாவில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் கூட்டமைப்பான ‘ ஐஸ்வாய்’’ இது தொடர்பாக மாநிலங்களுடன் நேரடிப் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்