சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கி யது. இன்று பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான நிலையில், பொறியல் மேற்படிப்புபான விண்ணப்பமும் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இளநிலை பொறியியல் படிப்பான, பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  இன்று காலை தொடங்கி உள்ளது.

அதன்படி, பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்  https://www.tneaonline.org/  என்ற இணைய தளம் மூலம் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி  ஜூலை 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணாக்கர்கள் தங்கள் படிக்கும்  அரசுப்பள்ளி, தனியார் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், கிராமப்புற மாணவர்கள் உள்பட மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பம் செய்ய, மாநிலம் முழுவதும்  110 சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். ஜூலை 20-31 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். தொடர்ந்து,  ஆகஸ்டு 8 ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,அ னைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.