சென்னை

மிழக பொறியியல் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.  மாணவர்கள் தங்கள் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று காலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.

பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரேண்டம் என் ஆகஸ்ட் 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.