மும்பை: 2022ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளதாக மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா வழிகாட்டுதலுடன் , குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹஜ் 2022 நடைபெறுகிறது,

இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள் மற்றும் ஹஜ் 2022-ன் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்திய, சவுதி அரசுகளால் வகுக்கப்படும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஹஜ் பயணிகள் தேர்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மும்பையிலுள்ள ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.  ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையை தொடங்கி வைத்து பேசிய   மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி , ‘அடுத்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடவடிக்கை தொடங்கியது.அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும் என்று கூறினார். அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை மற்றும் இ-மசிஹா வழங்கப்படும் என்றும் கூறினார்.