பெங்களூரு: இந்திய நாட்டுக்கு தேவைப்படும் வெங்காயத்தில் பெரும் பங்கை ஈடு செய்யும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தற்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ 200 என்று ஆனது. இது மார்கெட்டுக்கு மிக மிகக் குறைந்த அளவில் சப்ளையின் காரணமாக நிகழ்ந்தது என்று அதிகாரிகள் கூறினர்.
“வெங்காயத்தின் விலை சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூபாய் 200 ஆகவும், மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூபாய் 5,500 முதல் 14,000 எனவும் ஆனது” என்று மாநில விவசாய சந்தை அலுவலர் சித்தரங்கையா கூறினார். இதன் விளைவாக மக்கள் பொதுவாகவும் என்றும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு காய்கறியான வெங்காயம் பெங்களூர் மக்களின் உணவில் இடம் பெறாமல் போனது.
இந்தியாவில் வெங்காயத்தின் தேவை 150 மெட்ரிக் டன்னாகும். இதில் 20.19 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கர்நாடக மாநிலம் கொடுத்து வந்தது. ஆனால், வெங்காய உற்பத்தியானது இம்மாநிலத்தில் முன்கூட்டிய அறுவடையாலும் விளைச்சல் குறைவாலும் 50% இழப்பானது. எனவே,எஞ்சிய வெங்காயமே சந்தைக்கு வந்தது.
பெரும் மழையும் அறுவடை குறைவுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். நவம்பர் மாதத்தில் கர்நாடகாவில் 60-70 குவிண்டால் வெங்காயம் வரத்தில் இருந்தது. இதுவே டிசம்பர் மாதத்தில் 50% குறைந்து காணப்பட்டது. வெங்காயத்தின் இருப்பை உறுதி செய்ய விவசாய உற்பத்தி சந்தக் குழுவானது விடுமுறை நாட்களிலும் விற்பனை நடைபெற சுற்றறிக்கை அனுப்பியது.
”வெங்காயத்தின் சேமிப்பு கர்நாடக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் அவ்வளவாக இல்லை. ஆச்சர்யகரமாக கர்நாடகாவில் வெங்காயத்தை சேமிப்பதற்கான நன்கு வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் களங்கள் எதுவும் இல்லை என்று சித்தரங்கையா கூறினார். அதேவேளையில் பதுக்கலைக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.