சென்னை,

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் கடந்த ஆண்டு 22ந்தேதி அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்தார்.

அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோது, அவர் சிகிச்சை பெற்று வரும் படத்தை வெளியிட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கோரி வந்தனர்.

அப்போது சசிகலா குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி அப்பல்லோ நிர்வாகமும், ஜெ. சிகிச்சை பெறுவது குறித்து படமோ, வீடியோவோ பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதா மறைந்து 1 வருடம் ஆக இருக்கும் நிலையில், தற்போது அவர் சிகிச்சை பெற்ற வீடியோ பதிவான சி.சி.டி.வி காட்சிகள் உள்ளன இருப்பதாக சசிகலா உறவினரும், அதிமுக அம்மா துணைப்பொதுச்செயலலாளரான டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

இது பொதுமக்களிடைய பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது ஆதரவு எம்எல்ஏக்களை கர்நாடகாவில் உளள  கூர்க் சொகுசு விடுதியில் சந்தித்து பேசிய டிடிவி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தங்களிடம் இருப்பது உண்மை தான். அந்த காட்சிகளை வெளியிடக்கூடாது என்று சசிகலா கூறி உள்ளார். எனவே சசிகலா ஒப்புதல் இல்லாமல் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட முடியாது என்றும்,

அதே நேரத்தில்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளிடம் சி.சி.டி.வி காட்சிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றபோது,  ஜெயலலிதாவை எந்தவித புகைப்படமோ, வீடியோவோ எடுக்கவில்லை என்று அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

அதேபோல  ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவோ, புகைப்படமோ தங்களிடம் இல்லை என்று தமிழக அரசும் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தங்களிடம் இருப்பதாக தினகரன் கூறியுள்ளார்.

இது பொதுமக்களிடைய பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வருடம் கழித்து இதுபோல ஒரு தகவலை டிடிவி தினகரன் வெளியிட்டிருப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.