சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 1ந்தேதி)   முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு என  தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்து உள்ளது.

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு (ஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைப்பின் தலைவர் நந்தகுமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

மத்தியஅரசு குற்றவியல் சட்டங்களை மாற்றம் செய்துள்ளது. இந்த குற்றவாயில் சட்டங்கள் ஜுலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 1 (இன்று) முதல் 8ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 1.5 லட்சம் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

மேலும், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள ஜலை 1ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.  ஜுலை  2ம் தேதி வழக்கறிஞர்கள் சங்கம் முன் ஆர்ப்பாட்டமும், 3ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். 8ம் தேதி திருச்சியில் மாநில அளவிலான பேரணி நடைபெற உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…