ந்தூர்

ழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆன்லைன் கேமில் கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன் படி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அனவைரிடையேயும், ஆன்லைன் கேம்ஸ் என்பது மிகவும் பாப்புலர் ஆகி வருகிறது.   அதுவும் பள்ளி மாணவர்களிடையே மிக மிக பாப்புலர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதில் எல்லாம் விளையாட்டுகளுமே பாதுகாப்பானவை என சொல்ல முடியாது.   உதாரணத்துக்கு ப்ளூ வேல் போன்ற  விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கு கொடுக்கும் பல இன்ஸ்ட்ரக்‌ஷன் தற்கொலைக்கு தூண்டுபவையாக உள்ளது என்பதும், இது போல விளையாட்டால் மும்பையில் ஒரு சிறுவன் தற்கொலை செய்துக் கொண்டதும் தெரிந்ததே.

இந்தூர், ராஜேந்திர நகரில் உள்ள சமேலி தேவி பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் ஒரு சிறுவன் தனது தந்தையின் மொபைலில் இது போல ஒரு விளையாட்டை விளையாடி வருகிறார்.  அதில் ஒரு லெவலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.  அந்த விளையாட்டில் தோற்பவர்களுக்கு அந்த விளையாட்டில் உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பள்ளியில் காலை வணக்கம் முடிந்ததும் அந்த சிறுவன் கடகட  என கூரையின் மேல் ஏறத்துவங்கினார்.  அதைக் கண்ணுற்ற மற்ற மாணவர்கள் உடனடியாக அவரை உடற்பயிற்சி ஆசிரியர் முகமது ஃபாரூக் உதவியுடன் இழுத்து வந்தனர்.  இது பற்று உடற்பயிற்சி ஆசிரியர் , “நாங்கள் தடுத்து நிறுத்திய போது அந்த மாணவன் முகத்தில் ஒரு எரிச்சல் இருந்தது.  இது பற்றி ஏதும் சொல்லாமல் பயந்த நிலையில் இருந்த அந்த சிறுவன், பிறகு அந்த விளையாட்டில் வந்த இன்ஸ்ட்ரக்‌ஷன் படி தான் மேலே ஏறி அங்கிருந்து குதிக்க இருந்ததாக சொன்னான். ” எனக் கூறினார்.

பள்ளியின் முதல்வர் சங்கீதா இந்தச் செய்தியை அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பி தங்கள் குழந்தைகளை இது போல் அபாயகரமான விளையாட்டுகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.   அந்த மாணவனின் பெற்றோருக்கு முதலில் அந்த மாணவனுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் அனுப்பியதாகவும்,  அவர் தாயாருக்கு ஜுரமாதலால் பக்கத்து வீட்டினர் வந்ததாகவும்,  விஷயத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அவர்கள் அந்த சிறுவனின் தந்தையை அழைத்து அனைத்து விவரங்களையும் தெரிவித்தாதகவும் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் அனுப்பபட்டது.    காவல் அதிகாரி, “ அந்த மாணவனின் தந்தை அந்த விளையாட்டை தனது மொபைலில் விளையாடுவதைக் கண்ட அந்த சிறுவன் தானும் விளையாட ஆரம்பித்துள்ளார்.  எனவே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

மொத்தத்தில் இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்யவேண்டியது அரசின் தலையாய கடமை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் கேம்களின் விபரீதம் : தற்கொலைக்கு தூண்டப்பட்ட சிறுவன்

இந்தூர்

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆன்லைன் கேமில் கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன் படி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.