மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுத்த பணத்தில் 500 ரூபாய் நோட்டுகள் இரண்டு ஒரு பக்கம் பிரிண்ட் ஆகாமல் இருந்தது தெரிய வந்தது.
மத்தியபிரதேச மாநிலம் கால்ரகோன் மாவட்டம் சீகான் கிராமப்பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஹேமந்த்சோனி என்பவர் 1500 ரூபாய் எடுத்தார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தி லிருந்து வந்த நோட்டுகளில் இரண்டு நோட்டுக்களின் ஒரு பகுதி வெற்றிடமாக காணப்பட்டது.
இதுகுறித்து சோனி உடனே வங்கி அதிகாரிகளிடம் புகார் கூறினார். வங்கி அதிகாரிகள் அந்த நோட்டை கைப்பறி ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தனர்.
இது பிரிண்ட் தவறுதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
இன்று காலை மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டில் ஏதும் பிரிண்ட் ஆகாமல் இருந்தது.
ஏற்கனவே இதுபோல் 2000 ரூபாய் நோட்டில் ஒருபுறம் பிரிண்ட் ஆகாமல் இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பிரிண்டிங் மிஸ்டேக் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.