திருச்சி: திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி. குப்பை கொட்ட பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் திரும்பவில்லை.  காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொல்லப்பட்ட சிறுமியின் கையில் தான் கட்டிய கயிற்றை செந்தில் அறுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கையில் கட்டிய கயிற்றை அறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி மிரட்டியதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் மீது ஐபிசி சட்டம் 305ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]