சென்னை,
சமூக வலைதளங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு நீதிபதி பால்கிருபாகரன் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்த நீதி மன்றத்தில் கருத்தை விமர்சித்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பரை கைது செய்து சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நீட் விவகாரம் மற்றும் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அது குறித்த கருத்துக்களைத் தெரிவித்ததோடு, “கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையை விமர்சிப்பது சரியல்ல” என்றும் தெரிவித்தார்.
ஏற்கெனவே இது குறித்த வழக்கும் நீதி்மன்றத்தில் உள்ளது. நீதிபதியின் கருத்துக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “சமூக வலைத்தளங்களில் நீதிமன்றத்தை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இறுதியில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அக்டோபர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.