டெல்லி

மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மத்திய, மாநில அரசுகள் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 1 கோடி நிவாரண நிதியாக அறிவித்தது.

இந்நிலையில் இத்திட்டம் மேலும் சில துறைகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, அந்நோயாளிகளிடமிருந்து தொற்று பரவி உயிரிழக்க நேரிடும் பணியாளர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

அவ்வகையில் பாதுகாப்பு பணியாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.