டெல்லி:

ரே நாடு ஒரே ரேஷன் திட்டம்  2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்  ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ,  “‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் ஏற்கனவே 17 மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், தற்போது  மேலும் 3 மாநிலங்கள் இணைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதன் காரணமாக மொத்தம் 20 மாநிலங்கள்  ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில்  இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய உணவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் ரேஷன் காா்டை பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்க முடியும்.  புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது, ஒடிஸா, சிக்கிம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் திங்கள்கிழமை இணைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட், நாகாலாந்து, மணிப்பூா் ஆகிய மாநிலங்களும் இணையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை நாடு முழுவதும் எவ்வித பிரச்னையுமின்றி அமல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டைகளை மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்தும் ஒருங்கிணைப்பில் ஏற்கெனவே 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இப்போது கூடுதலாக 3 மாநிலங்கள் இணைந்துள்ளன‘.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.