சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று தொடங்கப்படுகிறது.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஒரேநாடு ஒரே ரேசன் திட்டப்படி அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்கு ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். வகையில், அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில், இன்று ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் முதல்வர் எடப்பாடியால் இன்று தொடங்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் . ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது என்று கூறியவர், இதற்காக ஒவ்வொரு கடைக்கும் 5 சதவீதம் கூடுதல் பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.