சென்னை; தமிழ்நாட்டில் மேலும் ஒரு வேங்கை வயல் சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மலம் கலக்கப்படும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊராட்சி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதால் பட்டியல் சமூக மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் புறக்கணிப்பு உள்ள கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று தெருக்களுக்கு வரும் குடிநீர் நாற்றம் வீசியது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கூறி உள்ளனர். ஆனால், ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்த பகுதி மக்கள் சிலர் அங்குள்ள மேல்நிலை தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் மனிதக் கழிவு கலந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலருக்கும் புகார் கூறினார். மேலும், இதுதொடர்பான வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக fடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபத்தோடு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பிறகே, அங்கு அதிகாரிகள், காவல்துறையினர் சென்று நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் பயன்பாட்டை உடனே நிறுத்தி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அந்த மேல்நிலை நீர் திறக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஊராட்சிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
“வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்”! திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…
திருப்பூர் அருகே மற்றொரு வேங்கைவயல் சம்பவம்! பரபரப்பு – 2 பேரிடம் போலீசார் விசாரணை
தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?
https://patrikai.com/another-vengaivayal-incident-in-tamil-nadu-the-human-feces-mixed-in-the-school-drinking-water-tank-near-thiruvarur-government-school-public-unrest/