டில்லி

தார் அட்டைகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆதார் அட்டை பற்றிய விவரங்களை பெற ஒரு சட்ட விரோத மென் பொருள் விற்கப்படுவதாகவும் அதன் விலை ரூ. 500 எனவும் முன்பு செய்திகள் வெளியாகின.  அந்த செய்திகள் வெளியிட்டவர்களை அரசு கைது செய்தது.   ஆனால் அந்த மென்பொருள் உண்மையானதா என்பதைப் பற்றியும் அந்த மென்பொருளை அமைத்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலும் வரவில்லை.

ஆதார் அட்டைக்கான விவரங்கள் பதிவு செய்ய தனியாருக்கு ஆதார் நிறுவனம் உரிமம் அளித்திருந்தது.  அதை ஒட்டி ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் பல தனியார் மையங்களிலும் வங்கிகளிலும் ஆதார் விவரங்கள் பதியப்பட்டு வந்தன.    இது தவிர சில படிவங்கள் அச்சிடப்பட்டு   அதில் பதியப்பட்ட விவரங்களைக் கொண்டு இந்த மையங்களிலும் வங்கிகளிலும் ஆதார் அட்டைக்கான விவரங்கள் பதியப்பட்டன.

ஆனால் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி ஆதார் நிறுவனம் சுமார் 50000 தனியார் மற்றும் வங்கி மையங்களை ரத்து செய்துள்ளது.   இதில் ஒரு சில தபால் நிலையங்களும் அடங்கும்.   பல தனியார் இதற்காக தனி மையங்கள் அமைத்து பதிவு செய்திருந்தனர்.   வங்கிகளும் தங்களின் பனிச்சுமைகளுக்கிடையே இந்த பணியையும் சேர்ந்து செய்து வந்தன.  தற்போது ரத்து செய்துள்ளது இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆதார் அனைத்து இனங்களுக்கும் சிறிது சிறிதாக அவசியமாக்கப்பட்டு வருவதால் பலர் இந்த மையங்களில் தங்களின் விவரங்களை பதிவு செய்து வந்துள்ளனர்.   இந்த பதிவுகளை திருட வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.   ஏற்கனவே பலருக்கு உரிமம் அளித்து பல விவரங்கள் பதியப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மக்களிடையே கலவரத்தை உண்டாக்கி இருக்கிறது.