கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகஅரசு சிலிண்டர் வெடித்து விபத்து என்று கூறி வருகிறது. ஆனால், காரில் தடயவியல் நடத்திய சோதனையில் குண்டுவெடிப்புக்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் பலியானவர், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தச்சென்றதாக, பாஜக கூறி வருகிறது. அதை உறதி செய்வதுபோல, அவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் (பால்ராஸ்), ஆணிகள் உள்ளிட்டவை கிடந்தன. அது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்த விஷயத்தில் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் களத்தில் குதித்துள்ளனர். இதனால், இந்த விஷயம் மேலும் பரபரப்பை எட்டியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் உயிரிழந்த ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த உக்கடம் முகமது தல்கா (வயது 25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது.
இந்த நிலையில் இந்த வெடிவிபத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர். கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர்கானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.