
டாகோட்
பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் டாகோட் மாவட்டத்தில் உள்ள டெசில் கிராமத்தில் ஒரு வழக்கு விசாரணைக்காக அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு காவ்ல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர் காவல்நிலையத்தில் மர்மமாக மரணம் அடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் மக்கள் பலரும் இந்த மரணத்துக்கு நீதி கோரி காவல் நிலையத்துக்கு முன் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது கும்பலைக் கலைக்க போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் குண்டு பாய்ந்து ஒருவர் மரணம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையொட்டி அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பு உண்டாகி பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான தகவல் ஏதும் வரவில்லை. போலீஸ் தரப்பில் கூடியுள்ள மக்கள் கல்வீசி போலீசாரைத் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]