அபுதாபி
ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி உள்ள கொரோனா தொற்றுக்குப் பல நாடுகளிலும் தடுப்பூசி மனித சோதனைகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும்.
இந்த சோதனையில் ஒருகட்டமாக இன்று அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தமக்கு ஒரு மருத்துவ ஊழியர் தடுப்பூசி போடும் புகைப்படத்தை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், “கொரொனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல உடல் நலத்துடனும் இருக்க விரும்புகிறேன். தடுப்பூசி கண்டு பிடித்து அரபு அமீரகத்தில் கிடைக்க உதவிய அனைவராலும் நாம் பெருமை அடைந்துள்ளோம். இனி எதிர்காலம் அமீரகத்தில் நல்லபடியாக விளங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.