கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட திமுக தொண்டர் : 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

Must read

சென்னை

சென்னை கொரட்டூரில் திமுக தொண்டர் ஒருவர் கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டதால் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பூட்டை உடைத்து மீட்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கொரட்டூரில் திமுக கட்சி கூட்டம் ஒன்று நடந்துள்ளது.  இங்குள்ள பேருந்து நிலையத்தில் ஒரு இலவச பொதுக் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.  அங்கு ஆண்கள் பெண்கள் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  இந்த கழிப்பறை இரவு 10 மணிக்குப் பிறகு பூட்டப்படுவது வழக்கமாகும்.  அவ்வகையில் கழிவறை பூட்டப்பட்ட பிறகு உள்ளே இருந்து சத்தம் வந்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் ஓடி வந்து பார்த்த போது உள்ளிருந்து கதவை திறவுங்கள் என யாரோ கத்தும் சத்தம் கேட்டுள்ளது.    திமுக தொண்டர்கள் சுமார் 30 நிமிடம்  போராட்டம் நடத்தி கதவின் பூட்டை உடைத்து மாட்டிக்கொண்டவரை மீட்டுள்ளனர்.   அதிர்ச்சியால் உறைந்திருந்த அவரிடம் என்ன நடந்தது என கேட்கபட்டுள்ளது.

அந்த நபர் தாம் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் கூட்டத்துக்கு வந்ததாகவும் அப்போது போன் பேசியபடி சிறுநீர் கழிக்க உள்ளே சென்றதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தாம் உள்ளே இருப்பதை அறியாமல் காவலாளி வெளியே பூட்டி விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்நிகழ்வு அங்கு இருந்தவர்கள் இடையே கடும் நகைச்சுவையை உண்டாக்கி உள்ளது.

More articles

Latest article