சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என  ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு (தூய்மை பணியாளர்கள்)  சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் துறை ஆணையர்  பொன்னையா ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊராட்சிகளில்வீடுதோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்  (PLF) மூலமாக தூய்மை காவலர்கள்  பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பார்வையில் கண்ட கடிதத்தில் தூய்மை காவலர்களக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்த கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறத.

தூய்மை காவலர்கள் சுழற்றி முறையில் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு துஹய்க்கலாம். இதற்கு மேல் கூடுதலா விடுப்பு தூய்க்கபடின், அவர்களுகு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.