புதுடெல்லி:
யில் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதும், ரயில்களின் கால அட்டவணை புத்தகம் வெளியாகும் என, ஐஆர்சிடி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால், ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன், 1,800க்கும் அதிகமான ரயில்களை, ரயில்வே துறை இயக்கி வந்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது அமலில் உள்ள நிலையில், ரயில்வே, 908 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. அதாவது, 50 சதவீத ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ரயில் போக்குவரத்து முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கிறோம். ரயில்களின் கால நேரத்தை தெரிவிக்கும், புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து முழுமையான நிலைக்கு திரும்பியதும், புத்தகம் வெளியாகும்.

பல எக்ஸ்பிரஸ் ரயில்களில், நிறுத்தங்கள், பயணியரின் கருத்தை கேட்டு குறைக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய அட்டவணை புத்தகம் வெளியான பின், எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம், 30 நிமிடத்திலிருந்து, ஆறு மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.