மதுரை:

சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க  மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது.

நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவ மருந்தான கபசுர குடிநீரை  எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று  கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இன்று புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து உள்ளது; அதை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை  போன்றவற்றை  எந்த சோதனையின் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குகிறீர்கள்?  என்றும், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்? ஒருபுறம் சித்த மருந்தை வாங்கிக் கொ ண்டு, மறுபுறம் அதில் கண்டுபிடிக்கும் மருந்தை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இ,ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குவந்தது. அதையடுத்து, இந்த விவகாரத்தில், சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க, மத்திய மாநில அரசுகளுக்கு   மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டு உள்ளது.